Breaking News

இன, மதவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க முயற்சி: ஜனாதிபதி குற்றச்சாட்டு

IN13_RAJAPAKSA_12130f நாம் எப்போதும் இனம், மதம், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாது தாய்நாட்டை முன்னிலைப்படுத்தி இலங்கையராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எந்த தருணத்திலும் அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் பாதுகாப்பது நாட்டை நேசிக்கும் அனைவரதும் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு அபிவிருத்தி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் நாட்டு மக்களின் நலனுக்காக அபிவிருத்திக்காக பல திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் ரீதியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க நாட்டுக்குள் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது குறித்து அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

 

(TW)

No comments