Breaking News

இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திக்கின்றனர் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

இளைஞர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றி சிந்திக்காமலும் தனக்குள்ள வாக்குரிமையை பயன்படுத்தாமலும் இருந்த  நிலையில் தற்போதைய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு இந்த பேரணி சான்றாக அமைவதாக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். 

இலங்கையில் பகைமைக்கு இடமில்லை எனும் தொனிப்பொருளுடனான  பேஸ் புக் நண்பர்களின் பேரணியொன்று நேற்று கொழும்பு தாமரை தடாகம் முன்பாக இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ட்டீன்  லூட்டகிங் 250 000 பேரின் ஆதரவுடன் லிங்கனின் சமாதிக்கருகில் சமூக ஒருமைப்பாட்டுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடினார். அதே போன்றதொரு போராட்டமாகவே இதனை நான் கருதுகிறேன். 

30 வருட கால யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் தொடர்பிலும் ஏற்பட்ட மனக்கசப்புகள் தொடர்பிலும் இளைஞரகள் சிந்திக்க வேண்டும். மறுபடியும் இரத்தக்கரை படிந்த இலங்கையை உருவாக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்றார்.

 

(VD)

No comments