Breaking News

ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் நிகழ்ச்சியி நடந்தது என்ன?

sltj-ii2கடந்த 21-04-2013 அன்று மாதம்பையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் மாற்று மத சகோதரர்களுக்கான இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் சிங்கள மொழிமூல் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பொலீசார் வேண்டியுள்ளனர், நீதிமன்ற உத்தரவுடன் வரும்படி ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தினர் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் உத்தியோக பூர்வ இனையத்தளம் வெளியிட்டுள்ள சிய்தியில் “ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று 21-04-2013 அழகாக நடந்து முடிந்தது. போலீசார் இறுதிக் கட்டத்தில் குழப்பம் வரும் என்று காரணம் காட்டி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். நீதி மன்ற உத்தரவுடன் வாருங்கள் நிறுத்துகிறோம் என்று நாம் கூறினோம். பின்னர் எமது நகர சபை சார்மன் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினை வராமல் இருக்க நான் பொறுப்பு என்றும் SLTJயினர் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் பிரச்சினைக்கு உரியோர் அல்லர் என்றும் எம்மைப் பற்றி போலீசாருக்கு நற்சான்று அளித்த பின்னர் நிறுத்தக் கோரிய போலீசாரே எமக்கு பாதுகாப்புத் தரும் நிலைக்கு அவர்களை அல்லாஹ் மாற்றினான். அல்ஹம்துலில்லாஹ். மிகச் சுவாரசியமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்று மதத்தவர்கள் கிட்டத்தட்ட 30 பேரும் எமது ஜமாஅத் அல்லாத 250 பேர்களும் நம் ஜமாஅத் உறுப்பினர்கள் 100 பேர்களும் அண்ணளவாக கலந்து கொண்டனர்.”

sltj-ii3

sltj-ii1

இதற்கு முன்னரும் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தினால் கடந்த 06/04/2013  அன்று கொழும்பு கொம்பனித் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமு பொலிசாரால் இடை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் தலைமையகத்தில் அது நடை பெற்றது.
பொது பல சேனா அமைப்பு இந்த ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பக கூறியிருப்பது நாம் அறிந்ததே, அதனை முடிந்தால் நிரூபித்துக் காட்டும் படி ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அதன் ஊடகவியலாளர் சந்திப்பில் சவால் விட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு சில வருடங்களுக்கு முன்  lakbima news பத்திரிகையின் ரங்க ஜயசூரிய எனும் செய்தியாளர் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தை தீவிரவாத அமைப்பு என்று கூறியிருந்தது, பின்னர் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் lakbima news அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோறியிருந்தது.

No comments