மேலும் சில நாடுகளில் பொது பல சேனா அலுவலகங்கள்…
தமது நாவடிக்கைகளை மேலும் சில நாடுகளுக்கு விஸ்தரிக்கவுள்ளதாக பொதுபல சேனாவின் ஊடகப் பேச்சாளரும், உயர்பீட உருப்பினருமான திலந்த விதானகேயே இவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவாறான கிளை அலுவலகங்கள் ரஷ்யா, பிரித்தானியா, பிரானஸ் ஆகிய நாடுகளில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பௌத்தர்கள் சர்வதேச நீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை இவ்வாறான அலுவலகங்கள் மூலம் பௌத்தர்களை ஒன்றினைத்து வெற்றி கொள்வதற்கு தமது அமைப்பு இனிமேல் செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பொதுபல சேனாவின் அலுவலகங்கள் ஏற்கனவே அமரிகாவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்படத் தக்கது.
அத்தோடு இன்றைய தினம் யாழ்ப்பான அலுவலகம் தொடர்பான விசேட கலந்துரயாடலொன்று அதன் தலமையகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது. குறித்த கலந்துரையாடலில் வடக்கிலிருந்தும் சில பிரதி நிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
No comments