Breaking News

முஸ்லிம்களுக்கு எதிராக கறுப்பு ஜூலை ஏற்படலாம் :கல்கந்த தம்மாநந்த தேரர்

4-15-2013 6-47-33 AM கறுப்பு ஜூலை இந்த வருடத்திலும்  ஏற்படலாம்  என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கந்த தம்மாநந்த தேரர்  அச்சம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வருடந்தோறும் கறுப்பு ஜூலையை இலங்கை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்த வருடம் அது முஸ்லிம்களுக்கு எதிரான கறுப்பு ஜூலையாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பெரும்பாலும் தோல்வியை கண்டுள்ளது.

இதனால் இலங்கையில் இன்று சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நன்றி : விடிவெள்ளி

No comments