Breaking News

என்னால் ஏட்பட்ட தவறுக்காக நபிகளாரின் முன்மாதிரி பற்றி திரப்படம் எடுக்கவுள்ளேன் : Arnoud Van Doorn

ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல் வலது சாரி அரசியல் வாதியுன், பிரபல இஸ்லாமிய எதிர்ப்பாளரும், ஃபித்னா (Fithna) திரைப்படத்தை உருவாக்கியவருமான Arnoud Van Doorn இஸ்லாததை ஏற்றமை, மற்றும் அவரது சவூதி விஜயம் பற்றி நாம் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டமை நினைவிருக்கும்.

 

அதே Arnoud Van Doorn தற்போது முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படித்தி எடுத்த ஃபித்னா (Fithna) திரைப்படத்தால் தன்னால் இஸ்லாத்துக்கும், நபியவர்களுக்கும் ஏற்பாட்ட இழுக்கை நீக்குவதற்கா தான் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய திறைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

எவாறாயினும், ஃபித்னா (Fithna) ஒரு முடிந்தா கதை, அதனை நான் மீண்டும் நினைவு படுத்த விரும்பவில்லை. அந்த திரைப்படம் நபியவர்களைப் பற்றிய மிகவும் தவறான வழிகாட்டல்களையும் கருத்துக்களை கூறியது, அந்த குறைகளைக் களைவதற்காக நான் இதைச் செய்யவுள்ளேன். என அவர் சவூதி அரேபிய பத்திரிகை ஒன்றிற்கு கருத்து வழங்கியிருந்தார்.

 

மேலும் அவர் கூறியதாவது, குறித்த திரைப்படத்தை கனட தஃவா அமைப்பான CDA (Canadian Dawa Association)  இனைந்து இந்த சர்வதேச தரத்தில் இத் திரைப்படத்தை தயாரிக்க என்னியுள்ளேன்.

 

ஃபித்னா (Fithna) திரைப்படத்தில் நான் சம்பந்தப்பட்டமை தொடர்பாக மிகவும் வருந்துகிறேன். நான் இப்போது அழகிய இஸ்லாதை அனுபவிக்கிரேன், என்னை நேர்வழிப் படித்திய அல்லாஹ்வின் அருளை மெச்சிகிறேன். என்னுடைய கட்சியின் நன்பர்கள் எனது இஸ்லாத்துக்கான பிரவேசத்தால் என்னுடன் கோபமாக இருகின்றனர் . அவர்களில் சிலர் என்னை இப்போது துரோகியாக நினைக்கின்றனர். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் இது என்னுடைய சொந்த முடிவு, நான் இஸ்லாத்தின் மூலம் ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளேன், அதை நான் விட்டுக்கொடுக்க முடியாது என மேலும் அவர் கூறியிருந்தார்.

 

அவருக்கு இஸ்லாத்தை எத்தி வைத்த கனட தஃவா அமைப்பான CDA (Canadian Dawa Association)   இற்கு நன்றி கூரியதோடு. தான் முன்னனி இஸ்லாமிய அழைப்பாளர்களுடன் இனைந்து இஸ்லாமிய அழைப்புப் பனியில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக மேலும் கூறியுள்ளார்.

 

“அல்ஹம்துலில்லஹ்…”

No comments