குடிபோதையில் வாகனம் செலுத்திய பிக்குவுக்கு 6 மாத சிறை
நன்றி விடிவெள்ளி :
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் குடி போதையுடனும் வாகனம் செலுத்திய பிக்கு ஒருவருக்கு அனுராதபுர மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமாந்த ஆறு மாத சிறை தண்டனையும் 7500 ரூபா அபராதமும் விதித்து தீர்பளித்தார்.
ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த பொடலவத்தே வங்கீச என்ற பெயரை உடைய பிக்கு ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த தண்டனையாது 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இரவு நேரம் குறித்த பிக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி 6099 என்ற இலக்கத்தை உடைய வாகனமொன்றை அனுராதபுரம் நகரினூடாக செலுத்திய போது பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது குறித்த பிக்கு போதையில் இருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அனுராதபுர போக்குவரத்து பொலிஸ் பிரிவு குறித்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.
தன்மீதான குற்றச்சாட்டுக்களை குறித்த பிக்கு நீதிமன்றில் ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் இவ்வொத்திவைக்கப்பட்ட தண்டனையை அவருக்கு வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது
No comments