Breaking News

இஸ்லாம் அவமதிப்பு : அரசின் 3 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

4-17-2013 11-58-58 AM இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காத போது, இஸ்லாத்தை  ஏன் இகழ்கிறீர்கள்?   என  “பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ்“ என்று  தம்மை அறிமுகம் செய்துள்ள குழுவொன்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்  இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பவை மீதே நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இஸ்லாம் சமயம் அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காத போது, இஸ்லாமை ஏன் இகழ்கிறீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு கடைசி எச்சரிக்கை. இதை நிறுத்துங்கள். என  சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரித்துள்ளதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான குறித்த மூன்று இணையத்தளங்களும் மீள இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி : விடிவெள்ளி

No comments